நவராத்திரி இறுதி நாளை முன்னிட்டு தேனி பங்களாமேட்டில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீதி ஊர்வலம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள பங்களா மேட்டில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் திருக்கோவில் உள்ளது.
இந்த கோவிலில் நவராத்திரி தினத்தை முன்னிட்டு கொழு பொம்மைகள் வைக்கபட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை காட்டபட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இன்று நவராத்திரி தினத்தின் இறுதி நாளை முன்னிட்டு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் சன்னதியில் இருந்து தேரில் எழுந்தருளி பங்களா மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சன்னதிக்கு கொண்டு சென்றனர் பின்னர் சன்னதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு ஊஞ்சலில் அமர வைத்து தாலாட்டு பாடப்பட்டது.
இந்த ஊர்வலம் நிகழ்ச்சி தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைகள் தலைவர் ராஜமோகன்,
General Secretary ஆனந்தவேல், பொருளாளர் பழனிப்பன் தலைமையிலும் கோவில் நிர்வாக செயலாளர் ராமபாண்டியன் , கோவில் நிர்வாக இணை செயலாளர் தாளமுத்து முன்னிலையிலும் நடைபெற்றது.
இந்த வீதி ஊர்வல நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள் பெற்றனர்.