நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி மக்கள் வாக்கெடுப்பு தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்றது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் பாலக்கரை ரவுண்டானம் அருகே தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி என்கிற மக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர் காஜா மைதீன், இளைஞர் அணி துணைச் செயலாளர் பெஸ்ட் ஃபாருக், முகமது தாஹா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நாட்டிற்கு தேவையா இந்த கவர்னர் பதவி மக்கள் வாக்கெடுப்பை மாநில தலைவர் கே எம் சரீப் வாக்களித்து துவக்கி வைத்து பத்திரிக்கையாளர்கள் கூறுகையில் இந்த மக்கள் வாக்கெடுப்பை நடத்திஅதை கவர்னருக்கு அனுப்பி வைப்பதாகவும் சில இடங்களில் இந்த வாக்கெடுப்பிற்கு தடை விதித்து நிர்வாகிகள் கைதியும் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ம.க.இ.க.இகோவன். பமமுக.அல்லூர் சீனிவாசன்,பெரியார் கருத்தாளர் சரவணன் வி.சி.க அரசு, திவிக ஆரோக்கியசாமி, வழக்கறிஞர் கென்னடி, கமருதீன், நா.த.க இரா பிரபு, சம்சுதீன், சிபிஐஎம் வெற்றி செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் நிகழ்ச்சியின் முடிவில் மேற்குத் தகுதி செயலாளர் ரபிக் ராஜா, நன்றி கூறினார்.