நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் குறித்து மலரும் நினைவுகளை பகிர்ந்த முன்னாள் மாணவி.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்டத்தின் சிறப்பு முகாம் பேட்டை அருகில் உள்ள விஸ்வநாத நகர் என்னும் இடத்தில் நடைபெற்று வருகிறது.
சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் தமிழாசிரியர் திருமதி கதிர்வள்ளி அம்மாள் அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றி பரிசுகளை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் கதிர்வள்ளி அம்மாள் அவரின் சிறப்புரையே ஒலிபெருக்கியில் கேட்ட முன்னாள் மாணவி திருமதி பாத்திமா தான் படிக்கும்போது கலந்து கொண்ட சென்ற நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் குறித்து மலரும் நினைவுகளை தற்போது மாணவர்களுக்கு பகிர்ந்தார்.
முன்னாள் மாணவி திருமதி பார்த்திமா அவர்களுக்கு விஸ்வநாத நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் திரு ஆர் ஏ பாண்டியன் செயலாளர் திரு நைனா முகமது பொருளாளர் திரு மோகன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
அப்போது முதுகலை பொருளாதார ஆசிரியர் திரு பொன்னுசாமி திட்ட அலுவலர் திரு ஆண்டோ ஆரோக்கிய ஜோதி ஆகியோர் உடன் இருந்தனர்.