BREAKING NEWS

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.

நாட்டு வெடிகுண்டுடன் ரவுடி குண்டாஸில் கைது.

 

திருச்சி அரியமங்கலம் திடீர் நகர் பகுதியில் பூட்டிய வீட்டில் செல்போன்கள் திருட்டு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதே பகுதியை சேர்ந்த திடீர் நகர் கணேஷ் வயது 22 என்பவரை கைது செய்து , நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

மேலும் விசாரணையில் எதிரி திடீர் நகர் கணேஷ் மீது சிறுவனை கடத்தி கொலை செய்ததாக ஒரு வழக்கும், சட்ட விரோதமாக நாட்டு வெடிகுண்டு வைத்திருந்ததாக ஒரு வழக்கும் வழிப்பறி மற்றும் இருசக்கர வாகனம் திருடுடியதாக ஒரு வழக்கு உட்பட எதிரி மீது 4 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது .

 

எனவே திடீர் நகர் கணேஷ் என்பவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும் , பகல் மற்றும் இரவு நேரங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதும், கத்தியை காட்டி பணம் பறிப்பது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் என விசாரணையில் தெரியவருவதால் குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு அரியமங்கலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

 

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர் . 

 

மேலும் திருச்சி மாநகரில் இதுபோன்ற திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார் .

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )