BREAKING NEWS

நாட்டை வலிமையாக மாற்ற கற்ற கல்வியை பயன்படுத்துங்கள்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு.

நாட்டை வலிமையாக மாற்ற கற்ற கல்வியை பயன்படுத்துங்கள்- இஸ்ரோ தலைவர் சோமநாத் பேச்சு.

கோவை காருண்யா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கல்வி நிறுவனத்தின் (நிகர்நிலை பல்கலைக்கழகம்) 26-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டி.ஜி.எஸ். தினகரன் கலையங்கரத்தில் நடந்தது. துணைவேந்தர் மன்னார் ஜவஹர் வரவேற்றார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவரும், விண்வெளித்துறைக்கான இந்திய அரசின் செயலாளருமான சோமநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா பேரூரையாற்றினார்.

அவர் பேசுகையில் இன்று சவால்கள் நிறைந்த ஒரு புதிய கட்டத்திற்கு உங்கள் வாழ்வு நகருகின்ற தருணம். தைரியமாக, அறிப்பூர்வமாக சவாலான தொழில் வாய்ப்புகளை தேர்ந்தெடுங்கள். தற்போது விஞ்ஞானிகள், பொறியியல் வல்லனுர்களின் சவால்கள் முந்தைய தலைமுறையினரின் சவால்களில் இருந்து வேறுபட்டவை. எனவே அந்தந்த துறையில் நிபுணத்துவம் மற்றும் ஆழ்ந்த ஆராய்ச்சி அனுபவம் பெற்றவர்களால் மட்டுமே பிரச்சிைனகளுக்க தீர்வு காண முடியும்.

 

எனவே கற்றல் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும். உங்களிடம் பேரார்வம் இருக்க வேண்டும். எப்போதும் மாணவராகவே இருங்கள். எல்லாவற்றிற்கும மேலாக பணிவோடும், நேர்மையோடும் நடந்து கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நமது நாட்டை வலிமையாக மாற்றுவதற்கு நீங்கள் கற்ற கல்வியை ஒருங்கிணைத்து பயன்படுத்துவது அவசியம். எதிர்காலத்தை கட்டியெழுப்பும் பணியில் ஈடுபடும் பணிகளை வாழ்த்துகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.

இணை துணைவேந்தர் டாக்டர் ஜேம்ஸ் ஆண்டறிக்கை வாசித்தார். காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன் தலைமை தாங்கி 1698 மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் பேசுகையில் தொழில் துறையில் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய உண்டு. எனினும் நீங்கள் கற்ற கல்வியும், சிறந்த வாழ்க்கை நெறிமுறைகளும் நீங்கள் வெற்றியடைய வழிகாட்டும்.

நீங்கள் நமது பாரத தேசத்தை உலகளாவிய அளவில் எல்லா துறைகளிலும் சிறந்த தேசமாக மாற்ற வேண்டும் என்றார். இஸ்ரோ தலைவர் சோமநாத், பேராசிரியர் கொலின் பிரைஸ் ஆகியோரின் சேவையை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவில் இவாஞ்சலின் பால் தினகரன், டிரஸ்டி சாமுவேல் தினகரன், இணைவேந்தர்கள் ரெட்லிங் மார்கரேட் வாலர், இ.ஜே. ஜேம்ஸ் மற்றும் எலிசபெத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )