BREAKING NEWS

நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை  போலீசார் கைது செய்தனர்.

நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை  போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா உத்தரவுபடியும் திருவிடைமருதூர் காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றி வேந்தன் அறிவுரையின் பேரில் பந்தநல்லூர் காவல் ஆய்வாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் மதியழகன், ராஜராஜ சோழன் காவலர் பிரபாகரன் ஆகியோரை வைத்து தனிப்படை அமைத்து பந்தநல்லூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் மணல்திருட்டு, சாராயம், கஞ்சா, பான்பராக் புகையிலை வைத்திருத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை தேடி வரப்பட்ட நிலையில்,

இன்று 29 ம் தேதி பந்தநல்லூர் அருகே திட்டச்சேரி கொள்ளிடம் ஆற்றங்கரை வவ்வா தோப்பு அருகில் பன்னீர் (வயது 38) மணகுண்ணம் சிவக்குமார் (வயது 35) மனக்குண்ணம் பழனி (வயது 48) திட்டச்சேரி மணிவாசகம்(வயது 22) ஆகிய நான்கு நபர்கள் ஒவ்வொரு இருசக்கர வாகனங்களில் தலா 5 மணல் மூடைகளை வைத்து பந்தநல்லூர் நோக்கி வந்து கொண்டு இருந்த நபர்களை தனிபடையின் மூலம் பிடித்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து பந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )