இந்நிலையில் அதிமுகவின் ஏழு வங்கிக் கணக்குகளை முடக்கக்கோரி ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில், “அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் இருக்கின்றன. மேலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டிருக்கிறோம். இந்த நிலையில் அதிமுக வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என நான் ஏற்கெனவே அதிமுக கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
ஆனால், அந்த வங்கிகள் எனது கோரிக்கையை செயல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின்படி தற்போதுவரை நான்தான் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறேன். அதிமுக பொதுக்குழு விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை அதிமுகவின் அனைத்து வங்கிக் கணக்குகளையும் முடக்க வேண்டும். இது குறித்து உடனடியாக அந்த வங்கிகளுக்கு எனது கோரிக்கையைச் செயல்படுத்த அறிவுறுத்த வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார். மேலும் எந்தெந்த வங்கிகளில் அதிமுகவிற்குக் கணக்கு இருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.