நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் போடியில் நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சியின் சார்பாக போடி வ.உ.சி.திடலில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களான அனீஸ் பாத்திமா மற்றும் சிவா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இதில் ராஜு காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை விடுதலை செய்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்தும் மத்திய மாநில அரசுகள் இந்து முஸ்லிம் என்ற போர்வையில் மக்களை பிளவுபடுத்துவதாகவும்,
தமிழகத்தில் தமிழர் என்ற உணர்வோடு இருக்கும் மக்களிடையே மதவாத சக்திகளைக் கொண்டு மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டிய நாம் தமிழர் கட்சியினர் மத்திய அரசையும் மாநில அரசுகளையும் கடுமையாக சாடினார்.
மோடி அரசை எதிர்க்கும் தமிழகத்தை ஆளுகின்ற திமுக கட்சியினர் திண்டுக்கல்லில் மோடியை வரவேற்றனர் இது மக்களை ஏமாற்றும் செயலல்லவா என பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.
இந்த கூட்டத்தில் பாராளுமன்ற பொறுப்பாளர் பிரேம் சந்தர் போடி சட்டமன்ற பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.