நிலக்கோட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.

திண்டுக்கல் மாவட்டசெய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே நடராஜர் கோவில் முன்பு இந்து முன்னணியினர் திமுக எம்.பி. ராசாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இந்து முன்னணி மதுரை கோட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் இந்துக்களை இழிவாக பேசிய ராசாவை கண்டித்தும் உடனடியாக பதவி விலக வேண்டும் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர்கள் செல்வம், பரமேஸ்வரன் , நகர தலைவர் முருகன், நகர செயலாளர்கள் அன்பு, சரவணன், லோகேஷ் குமார் , அழகர்சாமி, கோபி மற்றும் பெண்கள் உள்பட சுமார் 70க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்புக்கு நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முத்தையா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
