BREAKING NEWS

நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தின விழா.

நிலக்கோட்டையில் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 35 ஆம் ஆண்டு நினைவு தின விழா.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை நால்ரோடு அருகே முன்னாள் முதலமைச்சர் , அதிமுக கட்சி நிறுவனருமான எம்ஜிஆர்  35ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும்,  வீர அஞ்சலியும், நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளரும், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவருமான யாகப்பன் தலைமை தாங்கி வீர அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

திண்டுக்கல் முன்னாள் எம்.பி. உதயகுமார், நிலக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் நகரச் செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை நகரச் செயலாளர் சேகர் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொறுப்பாளர் சேசுராஜ் ஒன்றிய அவைத் தலைவர் தவமணி,

 

ஒன்றிய துணைச் செயலாளர் ஜெயசீலன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, நிலக்கோட்டை பேரூராட்சி வார்டு கவுன்சிலர் முத்துக்குமார், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணக்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் காட்டு ராஜா, சங்கையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Share this…

CATEGORIES
TAGS