நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு.
நிலக்கோட்டை அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி ஆசிரியர்கள் ஏற்பாடு.

நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள கொழிஞ்சிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கோடை காலத்தை உபயோகமாக பயன்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் தானாக முன்வந்து பொது மக்கள் ஒத்துழைப்புடன் 5 நாள் கோடைக்கால சிறப்புப் பயிற்சி முகாம் மற்றும் பள்ளி ஆசிரியர் மாணவர்கள் கையெழுத்து இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

விழாவில் கராத்தே,யோகா,நடனம்,நடிப்பு,கைவினைப்பொருட்கள் செய்தல் பயிற்சி, ஓவியம்,சிலம்பம்,கதை எழுதுதல்,நாடக நடிப்பு,கையெழுத்துப் பயிற்சி மற்றும் மதிய உணவுடன் அனைத்து ஆசிரியர்கள் விடுமுறை தினத்தை கூட பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி மாணவர்களுக்குப் பயன்படும் விதமாக கோடைகாலத்தை செயல்படுத்தியதால் கிராம மக்கள் ஆசிரியர்களைப் பாராட்டி னார்கள்.
இவ்விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாண்டி, சென்றாய பெருமாள், பெருமாள் ,பள்ளி ஆசிரியர்கள் பால்ராஜ், செந்தமிழ்ச் செல்வன்,ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
