நிலக்கோட்டை அருகே பிஸ்கட் கம்பெனி மேலாளர் வீட்டில் ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி கொள்ளை

திண்டுக்கல், நிலக்கோட்டை, E.B.காலனியை சேர்ந்த சுதர்சன் மகன் பிரத்திசெட்டி(35) இவர் தனியார் பிஸ்கட் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
உறவினரை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இன்று வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து ரூ.4 லட்சம் பணம், 10 கிராம் தங்க நகை, 800 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இது குறித்து பிரத்திசெட்டி நிலக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, சார்பு ஆய்வாளர் அருள்குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடைபெற்றது
CATEGORIES திண்டுக்கல்
TAGS E.B.காலனிகுற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டம்நிலக்கோட்டைபூட்டை உடைத்து திருட்டு