BREAKING NEWS

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.

நிலக்கோட்டை அருகே 4 தலைமுறையாக சமாதியில் பொங்கல் வைத்து வழிபாடு.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.

 

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி சேர்ந்தவர் ஒச்சா தேவர். இவர் கொடை ரோட்டில் ரயில்வே துறையில் ஸ்டேஷன் மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர்.

 

கடந்த 4.1. 1964 ஆம் ஆண்டு திடீரென்று ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக இறந்து போனார். அவர் இறந்த காலம் தைப்பொங்கலை ஒட்டி வந்த காலம் என்பதால் இவரது மனைவி ரத்தினம்மாள்.

 

1964ஆம் ஆண்டு முதல் கடந்த 2020 ஆம் ஆண்டு வரை தனது குடும்பத்துடன் குளத்துப்பட்டி கண்மாய் கரையில் உள்ள சமாதிக்கு சென்று பொங்கல் திருநாளன்று வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடாமல் தனது கணவரின் சமாதியில் பொங்கல் வைத்து கொண்டாடி வந்தார்.

 

இந்த தகவல் இப்பகுதியில் உள்ள சுற்றுப்புற பகுதி மக்களுக்கு தெரியும். இந்நிலையில் தனது கணவர் ஒச்சா தேவரின் இறப்பிற்குப் பின்பு நான் சமாதி கொண்டாடி வந்ததை எனக்குப் பின்னால் வரும் தலைமுறைகளும் தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்று குறிப்பிட்டு வந்தார்.

 

இதனை தற்போது அவரது வாரிசுகள் 4 வது தலைமுறையை தொட்ட போதும் தனது வீடுகளில் பொங்கல் வைப்பதை தவிர்த்து பூட்டான் நினைவாக பொங்கல் வைத்து வழிபாடு செய்து பொங்கல் மக்களுக்கு வழங்கி வரும் சம்பவம் இப்பகுதியில் பாராட்டத்தக்க இருக்கிறது.

 

இன்றைய காலகட்டத்தில் பெற்றெடுத்த தாய், தந்தைகளையே முதியோர் இல்லம், அனாதையாக பிச்சை எடுக்க விடும் சம்பவம் நடைபெறும் இந்த நாட்டில் ஒரு குடும்பம் தனது மூத்தோர்களுக்கு 4 தலைமுறையாக குடும்பமே தலைமுறையாக முன்னோர்களின் மரியாதை செலுத்தும் விதமாக பொங்கல் வழிபாடு செய்யும் வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.

 

இதுகுறித்து குடும்பத்தினர் தெரிவித்ததாவது:- தமிழக கலாச்சாரங்களில் படி முன்னோர்கள் வழிபட்டு வந்த முறையை தொடர்ந்து செய்வோம் என உறுதி அளித்தனர்.

 

CATEGORIES
TAGS