நிலக்கோட்டை தாலுகாவில் 165 பேருக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்க கடந்த 1 ம் தேதி ஜமாபந்தி திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் பிரேம்குமார் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி நரியூத்து , கோட்டூர், நிலக்கோட்டை , பச்சைமலையான் கோட்டை, கோடாங்கிநாயக்கன்பட்டி , நக்கலூத்து, சிலுக்குவார்பட்டி, நூத்துலாபுரம், பங்களாபட்டி, சின்னமநாயக்கன் கோட்டை ,விளாம்பட்டி, எத்திலோடு, பிள்ளையார்நத்தம் , முசுவனூத்து, கூவனூத்து, வீலிநாயக்கன்பட்டி, சிவஞானபுரம் , போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி, சித்தர்கள் நத்தம், மாலையைகவுண்ட ன்பட்டி, குல்லக்குண்டு, கல்லடிப்பட்டி, ராமராஜபுரம், மட்டப்பாறை , ஜம்பு துரைகோட்டை, ஒரு தட்டு , பள்ளபட்டி, சேவுகம்பட்டி ஆகிய 25 கிராம ஊராட்சிகளில் இருந்து சுமார் பட்டா மாறுதல் , வீட்டுமனை பட்டா, அடங்கல், பல்வேறு கோரிக்கைகளை ஏற்று இதுவரை 612 மனுக்கள் வரப்பட்டுள்ளது. இதில் 165 பேர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டார். ஜமாபந்தியில் ஆர். டி. ஓ. பிரேம்குமார் கிராம நிர்வாக அலுவலர்கள், மண்டல துணை தாசில்தார், தாசில்தார் , வருவாய் ஆய்வாளர்களுக்கு மற்றும் நில அளவை அதிகாரிகளுக்கு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்களை முறையாக விசாரித்து மக்கள் பயன்பெறும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மண்டல துணை தாசில்தார் சரவணன், தலைமை நில அளவையர் செந்தில்குமார் வருவாய் ஆய்வாளர்கள் பிரேமா , பிரியங்கா , அறிவழகன், சண்முகசுந்தரம், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
