BREAKING NEWS

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்

நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தாலுகா பகுதியில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர்களுக்கு நில அளவை குறித்த அப்பு பயிற்சி முகாம் திண்டுக்கல் மண்டல நில அளவை ஆய்வாளர் சரவணக்குமார் தலைமையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் நிலங்களை உட்பிரிவு செய்து பட்டா வழங்குதல், நீதிமன்ற வழக்குகளில் உள்ள நிலங்களை உட்பிரிவு செய்தல், பட்டா மாறுதலுக்கான என்னென்ன அடிப்படை முகாந்திரம் தேவை என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, மண்டல துணை தாசில்தார் சரவணகுமார், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )