நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் திண்டுக்கல் செல்ல பொதுமக்கள் காத்திருப்பு 2 மாதமாக சரிவர பஸ் வரவில்லை பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சுற்றியுள்ள சிலுக்குவார்பட்டி, விளாம்பட்டி, அணைப்பட்டி, பிள்ளையார்நத்தம், முசுவனூத்து, மைக்கேல் பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து, பள்ளிக்கு செல்வதற்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் தனியார் வேலைக்குச் செல்வதற்கும் பூக்களை திண்டுக்கலுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்வதற்கு என,
பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் திண்டுக்கல்லுக்கு நோக்கி பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 மாதமாக திண்டுக்கல்லில் இருந்து நிலக்கோட்டை அதிக பஸ்கள் வருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிக அளவில் அரசு பசு தான் வருகிறது தனியார் பஸ்ஸும் அதிக அளவில் இல்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாமலும் வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பல்வேறு நிலையில் அதிகாரிகளுக்கு முறையாக முறையிட்டும் இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். படவிளக்கம் நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும் காட்சியை படத்தில் காணலாம்.
