BREAKING NEWS

நிலக்கோட்டை பேரூராட்சியில் திட்ட பணிகள் மாநில ஆணையர் நேரில் ஆய்வு

நிலக்கோட்டை பேரூராட்சியில் திட்ட பணிகள் மாநில ஆணையர் நேரில் ஆய்வு.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சிக்கு சென்னை பேரூராட்சிகளின் ஆணையர் டாக்டர் இரா. செல்வராஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் திரவ கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகள், திட்ட செயல்பாடுகள் குறித்து பல்வேறு பணிகளைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது திண்டுக்கல் மண்டலம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் சுபாஷினி ஸ்ரீபிரியா கதிரேசன். துணைத் தலைவர் முருகேசன். பேரூராட்சியின் செயல் அலுவலர் சுந்தரி மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்கள். தலைமை எழுத்தர் பாலகிருஷ்ணன் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )