BREAKING NEWS

நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்டால் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லுபடி ஆகாது தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்.

நீதிமன்ற தீர்ப்பை மீறி செயற்பட்டால் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லுபடி ஆகாது தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம்.

பொதுக்குழு கூட்டம் முடிந்து தஞ்சை திரும்பிய ஓபிஎஸ் ஆதரவாளரும் துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அப்போது பேட்டியளித்த வைத்திலிங்கம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை
அவர்கள் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம், நீதி மன்ற தீர்ப்பை மீறி செயல்பட்டதால் அவர்கள் கொண்டு வந்த எந்த தீர்மானமும் செல்லுபடியாகாது, தேர்தல் ஆணையத்தை சந்திக்க அவர் டெல்லிக்கு செல்லவில்லை
ஜனாதிபதி பதவி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கூட்டணி கட்சி சார்பில் ஓ.பி.எஸ் டெல்லி சென்று இருக்கிறார்.

கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் அம்மா ஆசைபடி மீண்டும் ஆட்சி வர வேண்டும் ஒற்றுமை வேண்டும். கூட்டு தலைமை வேண்டும்
என்பதுதான் எங்கள் விருப்பம், சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என கோரி அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேட்ட கேள்விக்கு சசிகலாவை இணைத்து இதில் பேச வேண்டாம் என தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )