நீலகிரி மாவட்டம் அடுத்த லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது மண் சரிந்து விழுந்து விபத்து….
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த கட்டிடத்தையோட்டி பயன்படுத்தப்படாத பொது கழிப்பிடம் இருந்தது.
இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 8 ஊழியர்கள் ஈடுபட்டனர்.
பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைத்தனர்.
தொழிலாளர்கள் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் விவசாய நிலங்களை அளித்து மண் சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்குவதை கண்டித்தும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் துறையினரின் வாகனங்களை மறித்து அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மண்ணில் புதைந்து ஆறு பேர் உயிரிழந்தது பொது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.