நெஞ்சு வலியால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் நீண்ட நேரம் ஆகியும் மருத்துவர் வராததால் பலி உறவினர்கள் சாலை மறியல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அருகே பிள்ளைபெருமாள்நல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேகர் இவரது மனைவி ஜெயந்தி நெஞ்சு வலி காரணமாக திருக்கடையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு 9.30 மணி ஆகியும் மருத்துவர் வரததால் சிகிக்சை அளிக்கும் முன்பே மருத்துவ மனை ஊழியர்களின் அலட்சிய போக்கு காரணமாக உயிரிழந்தார்.
மருத்துவரின் பொறுப்பற்ற அலட்சியத்தால் உயிரிழந்ததாக பொதுமக்கள் சாலைமறியல்.
மேலும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் மருத்துவர்கள் சரிவர வரததால் மருத்துவமனையில் பணிபுரியும் அனைவரையும் இடமாற்றம் செய்து,
புதிய மருத்துவர் மற்றும் செவிலியர்களை மாற்றும் வரை சாலை மறியல் மற்றும் மருத்துவ மனையில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியல்.
CATEGORIES மயிலாடுதுறை