BREAKING NEWS

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பு துறை சார்பில் சாலைகளின் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியானது கடந்த 1-ம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட பராமரிப்பு துறை சார்பில் சாலைகளின் செல்லும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியானது கடந்த 1-ம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.

மாநில நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடங்களில் ஆங்காங்கே குடில்கள் அமைத்து, சிறப்பு பணியாளர்களை பணியமர்த்தி போக்குவரத்தை கணக்கெடுக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தென்காசி – பண்பொழி -திருமலைக்கோவில் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நடைபெற்ற வரும் போக்குவரத்து கணக்கெடுக்கும் பணியினை நெடுஞ்சாலை துறையின் தென்காசி கோட்ட பொறியாளர் ராஜசேகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வாகன கணக்கெடுப்பு பணியை ஆய்வு செய்து அது குறித்த தகவலை கேட்டு பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள ஊழியர்களுக்கு ஒரு சில அறிவுரைகளை கோட்ட பொறியாளர் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் முத்துகிருஷ்ணன், பூமிநாதன் மற்றும் சாலை ஆய்வாளர் காசி பாண்டி உள்ளிட்டோர்கள் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )