BREAKING NEWS

நெடுஞ்சாலை துறையோ அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமோ மேற்கண்ட சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு MLA S.தங்கப்பாண்டியன் மனுவில் கேட்டுக்கொண்டார்.

நெடுஞ்சாலை துறையோ அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமோ மேற்கண்ட சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு MLA S.தங்கப்பாண்டியன்  மனுவில் கேட்டுக்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் நகரின் வளர்ச்சித்திட்டப் பணிகளுக்காக நேரு சிலை முதல் சொக்கர்கோவில் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தோண்டப்பட்டு திட்டப்பணிகள் நடைபெற்றது.

 

தற்போது இச்சாலையில் திட்டப்பணிகள் முடிவடைந்துள்ளதால், புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டி மதுரையிலுள்ள ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ்உள்ள நெடுஞ்சாலைத்துறை (National Highways Authority of India) ஆணையத்தில் மண்டல அதிகாரி (RO) விபவ் மிட்டல் அவர்களை  MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் இன்று (20.10.2022) மாலை 4 மணியளவில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.

 

 இந்நிகழ்வில் மண்டல அதிகாரி அவர்களிடம் MLA அவர்கள் கூறுகையில், மேற்கண்ட சாலை மிகவும் பழுதடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் வியாபாரிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர் மேலும் 

 இச்சாலை (NH) நெடுஞ்சாலை த்துறையிலிருந்து,

 (NHAI) நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைத்துவிட்டதால்

 

NH நெடுஞ்சாலை துறையால் சாலை போடமுடியாது மேலும் சாலையில் திட்டப்பணிகளை மேற்கொள்ள (NHAI) நெடுஞ்சாலை துறை தான் அனுமதி வழங்கியுள்ளதால் சாலையை சீரமைக்கும்பணி NHAl தான் மேற்கொள்ள வேண்டுமெனவும்,

 

 தற்போது தற்காலிகமாக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பேஷ் ஓர்க் செய்து சாலையை சீரமைத்து.

 

 20 நாட்களுக்குள் ஒன்றிய அரசின் (NHAI) நெடுஞ்சாலை துறையோ

  மாநில (NH) நெடுஞ்சாலை துறையோ அல்லது குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமோ மேற்கண்ட சாலையில் புதியதாக தார்ச்சாலை அமைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

 

அப்படி இல்லையெனில் MP, MLA மற்றும் சேர்மனுடன் மீண்டும் தங்களை நேரில் சந்தித்து சாலை அமைக்கச்சொல்லி வலியுறுத்துவேன் எனக் கூறினார்.

 

அதற்கு மண்டல அதிகாரி அவர்கள் கண்டிப்பாக சாலையை சீரமைக்கும் பணியை துரிதப்படுத்தி, மீண்டும் புதியதாக தார்ச்சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார். 

 

இந்நிகழ்வில் மாநில (NH) நெடுஞ்சாலை துறை கோட்டப்பொறியாளர் DE புகழேந்தி உடனிருந்தார்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )