நெமிலியில் அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்.
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியில் உள்ள அரசு கால்நடை மருத்துவனையில் வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கால்நடை மருத்துவர் கவுசல்யா தலைமை தாங்கினார். நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன் முகாமை தொடங்கிவைத்தார்.
முகாமில் வளர்ப்பு பிராணியான நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, வளர்ப்பு பிராணிகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டது.
மேலும் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றி செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறை உள்ளிட்டவை குறித்தும் விளக்கப்பட்டது. இதில் துணைத்தலைவர் சந்திரசேகரன், பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.
CATEGORIES ராணிபேட்டை
TAGS அரசு கால்நடை மருத்துவனைதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நெமிலியில்ராணிப்பேட்டை மாவட்டம்வளர்ப்பு பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம்