BREAKING NEWS

நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை; ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..

நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் விற்பனை செய்ய முடியாத நிலை; ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..

டெல்டா மாவட்ட விவசாயிகளின் கோரிக்கை ஏற்று நெல்லின் ஈரப்பதத்தை அதிகப்படுத்தும் வகையில் ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் கான் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவினர் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று ஆய்வு தொடங்குகின்றன.

 

 

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் அறுவடை செய்த குருவை நெல்லை ஈரப்பதம் அதிகமாக உள்ளதாக கூறி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை, ஈரப்பதத்தினை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில்,

 

 

நெல்லின் ஈரப்பதத்தினை அதிகரிப்பது குறித்து ஆய்வு செய்ய ஹைதராபாத் உணவு தரக் கட்டுப்பாட்டு பிரிவு துணை இயக்குனர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் எம்.இசட்.கான் சென்னை உணவு தர கட்டுப்பாட்டு பிரிவு தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ் ஆகியோர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளனர்.

 

 

அதன்படி தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் நெல்லினை ஆய்வு செய்து ஈரப்பதற்கான காரணம் எதிர்நோக்கும் பருவமழை மற்றும் நெல்லின் தரம் குறித்து ஆய்வு செய்வதோடு விவசாயிகளிடம் கேட்டறிந்து நெல்மணிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

 

 

இதற்குப் பிறகு இந்த நெல்லினை ஆய்வு செய்து ஈரப்பதம் அதிகமாக கொள்முதல் செய்தால் அரிசியை பயன்படுத்த முடியுமா இது அதிகம் பட்சத்தில் ஈரப்பதம் உயர்த்துவது குறித்து மத்திய உணவு கழகம் அறிவிப்பு வெளியிடும். ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் உள்ள விவசாயிகள் நெல்களை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

 

 

இதே போல ஆலக்குடி , கல்விராயன் பேட்டை, சித்திரக்குடி, சடையார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர். பின்பு திருவாரூர் நாகை மயிலாடுதுறை மாவட்டங்களிலும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தனர்.

 

 

இது குறித்து விவசாயிகள் கூறும் போது மாலை இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகரிப்பது குறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனவும், அதிகப்படியான ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )