நெல்லையில் செஸ் போட்டி பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

நெல்லை வ.உ.சி மைதானத்தில் உள்ள இன்டோர் ஸ்டேடியத்தில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு செஸ் போட்டி நடைப்பெற்று வருகிறது.
50வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்கு உட்பட்ட ஜுனியர் செஸ் போட்டி 2022 மற்றும் 35வது தமிழ்நாடு மாநில 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான செஸ் போட்டி 2022 திருநெல்வேலி மாவட்ட செஸ் சதுரங்க முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் கழகம் இணைந்து சார்பில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியானது மூன்று நாட்கள் நடைபெறும்,இந்த போட்டியில் 34 மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 270 மாணவர்களில் 190 ஆண்களும் 80 பெண்களும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.


இந்த போட்டிகளில் வெற்றி பெறும் 2 ஆண் 2 பெண் இந்திய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பர் என்றும் அதில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் இந்தியா சார்பாக போட்டியிட கலந்துகொள்வார் என்று செஸ் கழக நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
