நெல்லையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழா செயலாளர் பேராசிரியர் K.A.இராஜன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. அ/நி வானதி, பி/ஞா ஆயிரத்தம்மாள் இறைவணக்கம், குருவணக்கம் பாட,
பேரா.பரமசிவம் தவம் நடத்த, பேரா. சங்கரலிங்கம் வரவேற்புரை வழங்கினார். செயலாளர் தலைமையுரை ஆற்ற, பேரா.V.S.முருகன், து/பே நடராஜன், அ/நி சீனிவாசன், பேரா.முருகானந்தி, பேரா.சுப்புலெட்சுமி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். பேரா.கற்பகவிநாயகம் சிறப்புரை ஆற்ற,
தவமைய அன்பர் பி/ஞா விஸ்வநாதன் ஐயா அவர்கள் நன்றியுரை வழங்க, பேரா.இராஜமாணிக்கம் அறிவிப்புகள் சொல்லி, உலக நல வாழ்த்துடன் விழா இனிதே நிறைவுற்றது. 52 அன்பர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாயுமானவர் தவமையத்தின் 29 வது ஆண்டு விழாதிருநெல்வேலி பத்தமடைதிருநெல்வேலி மாவட்டம்