BREAKING NEWS

நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்.

நெல்லையில் வருகிறது பிரம்மாண்ட சோலார் மின்நிலையம்.

டெல்லி:

நார்வே அரசுக்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் நிறுவனம், இந்தியாவில் பெரிய அளவில் சோலார் மின் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளது.

இந்தியா உட்பட பெரும்பாலான வளரும் நாடுகளில் மின் தேவை பெரும்பாலும் அனல் மின் நிலையம் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

நிலக்கரியில் இருந்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருப்பினும், அனல் மின் நிலையங்களால் அதிக காற்று மாசு ஏற்படுவதால், அதைக் குறைத்துவிட்டுப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் அதிகளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்த போதிலும், இப்போது வரை நமது நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, நிலக்கரி உற்பத்தி உற்பத்தி பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருந்தது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
நல்வாய்ப்பாக அப்படி எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், அப்போதே புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட இதர முறைகளில் மின்சார உற்பத்தி செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இந்தச் சூழலில் நார்வே நாட்டிற்குச் சொந்தமான ஸ்டேட்கிராஃப்ட் என்ற நிறுவனம் இந்தியாவில் தனது முதல் பெரிய அளவிலான சூரிய மின் உற்பத்தி நிலையத்தை இயக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இது நமது நாட்டின் சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தியை மேம்படுத்தும்.

நெல்லை

இதில் நமக்கு மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த சோலர் மின்நிலையம் தமிழ்நாட்டில் அமைய உள்ளது என்பது தான் அதுவும் நமது நெல்லை மாவட்டத்தில்.

76 மெகாவாட் (மெகாவாட்) சோலர் மின் நிலையம் நெல்லையில் அமைகிறது.

இதன் மூலம் ஆண்டுக்கு 120 GWh மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இது இந்தியா முழுவதும் இருக்கும் 500,000க்கும் மேற்பட்ட வீடுகளின் வருடாந்திர மின் நுகர்வுக்குச் சமமாகும்

இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )