நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி சுமார் 6 மாத காலமாக ஸ்ட்ரைக் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
இந்நிலையில் இவர்களின் எந்த கோரிக்கையும் நிறைவேற்றாமல், வெளியில் உள்ள தொழிலாளர்களை கொண்டு பேப்பர் மில்லை இயக்க இன்று நிர்வாகம் முடிவெடுத்ததை கண்டுத்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
CATEGORIES Uncategorized
