நெல்லை டவுண் பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்தது.

திருநெல்வேலி டவுண் காட்சி மண்டபம் அருகில் பாதாள சாக்கடையில் கடந்த வாரம் முதல் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவு நீர் வழிந்தோடி வருகிறது. இது தொடர்பாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.
ஆனால் கடந்த ஒரு வாரம் மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலை இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி, காட்சி மண்டபம் அருகிலுள்ள மேல தண்டிவீரன் கோவில் தெருவில் இருக்கும் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
நோய் பரவும் முன் மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் செல்லும் பாதைகளில் உள்ள அடைப்புகளை சரி செய்து தர வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
CATEGORIES திருநெல்வேலி