BREAKING NEWS

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தில் இருந்த கை பையிலிருந்த ரூ 50,300/- ஐ உரிய நபரிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர போலீசார்.

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் உணவகத்தில் இருந்த கை பையிலிருந்த ரூ 50,300/- ஐ உரிய நபரிடம் ஒப்படைத்த நெல்லை மாநகர போலீசார்.

 

நெல்லை மாநகரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் தூத்துக்குடி மாவட்டம் இடையன்விளையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் சாப்பிட வந்த போது மறந்து வைத்து சென்ற பையிலிருந்த ரூ 50,300/- மற்றும் வங்கி ஆவணங்களை நேர்மையாக மேலப்பாளையம் காவல் நிலையத்தில் உணவாக உரிமையாளர் அஜய் ஒப்படைத்தார்.

 

மேலும் பையிலிருந்த வங்கி ஆவணங்கள் மூலம் தொலைபேசியில் விசாரித்தது தகுந்த அடையாளங்களை சரிபார்த்து உரிய நபரான பாலமுருகன் என்பவரிடம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் உணவாக உரிமையாளர் அஜய் உரிமையாளரிடம் ரூ 50,300/- பணத்தை ஒப்படைத்தார். 

 

தனது பணத்தை நல்ல முறையில் பெற்றுக்கொண்டு உணவாக உரிமையாளர் அஜய் அவர்களுக்கும் மற்றும் காவல் அதிகாரிகளுக்கும் மனமார நன்றியை தெரிவித்தார். உடன் மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் கலந்து கொண்டார்கள்.

 

மேலும் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த உணவாக உரிமையாளர் அஜய் யை நெல்லை மாநகர கிழக்கு காவல் துணை ஆணையாளர் V.R.ஸ்ரீனிவாசன் மற்றும் மேலப்பாளையம் சரக காவல் உதவி ஆணையாளர் சதீஷ் குமார் பாராட்டினார்கள்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )