நெல்லை மாநகராட்சி 17-வது வார்டு பழையபேட்டை சர்தார்புரம் பகுதியில் தொடர் மழையால் மழை நீர் தேங்கி நிற்கிறது.
மழை நீரை அகற்றுவதற்கு திருநெல்வேலி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.மகேஸ்வரி அவர்கள் மாநகராட்சி ஊழியர்களை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பதே பொதுமக்கள் கோரிக்கை..
தொடர்ந்து மழை பெய்யும் போதெல்லாம் இந்த பகுதியில் மழை நீர் தேங்கி நிற்கிறது அதனால் அந்த பகுதி மக்களுக்கு நோய் வருவதற்கு அதிகமான வாய்ப்பு ஏற்படுகிறது.
மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுகிறது. சர்தார்புரம் நுழைவாயு பகுதியில் சாலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
CATEGORIES திருநெல்வேலி