நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே உள்ள பாலத்தை அம்பாசமுத்திரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தங்கம்மன் கோவில் அருகே ஒரு கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தரை பாலப்பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது.
தற்போது பணிகள் நிறைவு அடைந்ததால் இந்த பாலத்தை அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா இன்று திறந்து வைத்தார்.
அவருடன் மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன் பாபு முன்னாள் அதிமுக நகர செயலாளர் மணி பாண்டியன் சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலாளர் மாரிச்செல்வம் மற்றும் கே எஸ் ஆர் மாரிமுத்து ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் கட்டிட பணிகள் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் புகைப்படம் அகற்றப்பட்டது.