BREAKING NEWS

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.

நெல்லை மாவட்டம் அம்பை, வி.கே புரத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களுக்கு சிறை தண்டனை.

அம்பாசமுத்திரம் கீழ புதுத்தெருவைச் சேர்ந்த மகாலிங்கம் மனைவி ஆவுடையம்மாள் (75)ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு வீட்டின் அருகே குப்பையை தட்டுவதற்காக செல்லும் பொழுது பைக்கில் வந்த மர்ம ஆசாமிகள்அவர் அணிந்திருந்த மூன்று பவுன் எடையுள்ள தங்க தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

 

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் வீரவநல்லூர் கோட்டைவாசல் தெருவை சேர்ந்த மணி மகன்இசைச்செல்வன்( எ) கிங்,அவனது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்,கீழ்ப்பாட்டம் வடக்கு தெருவை சேர்ந்த முத்துக்குமார் என தெரிய வந்து இவர்கள் மீது அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

 

வழக்கை விசாரித்த நீதிபதி பல்கலைச் செல்வன்செயின் பறிப்பில் ஈடுபட்ட இசைச்செல்வனுக்கு சிறையில் இருந்த 125 நாள்கள் தண்டனை கால மாக கழித்து ரூ 3000அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனையும்,  முத்துக்குமாருக்கு ஆறு மாதம் சிறை தண்டனையும் ரூ 4000 அபராதமும், அவரது கட்ட தவறினால் இரண்டு மாதம் சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

 

இவ்வழக்கில் ஸ்ரீகாந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு அவரது வழக்கு தனி வழக்காக நடைபெற்று வருகிறது.

இதேபோல் விக்கிரமசிங்கபுரம் நாயுடு ரைஸ் மில் தெருவைச் சார்ந்த ராமசாமி மனைவி சுப்புலட்சுமி(56)இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதிகாலையில் வீட்டின் முன்பு இருக்கும் பொழுது அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

 

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் அம்பை அருகே உள்ள முடப்பாலம் தெற்கு காலனி சார்ந்த கண்ணன் மகன் முத்து செல்வன் (35),பிரம்மதேசம் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் மருதுபாண்டி (27)என தெரிய வந்து இவர்கள் மீது அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

 

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செயின்பறிப்பில் ஈடுபட்ட முத்து செல்வத்திற்கு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கழித்து ரூபாய் 4000 அபராதமும் அபராதத்தை கட்ட தவறினால் 2 மாதம் சிறை தண்டனையும்,மருது பாண்டிக்கு சிறையில் இருந்த நாட்களை தண்டனை காலமாக கருதி ரூபாய் 3000 அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் இரண்டு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

 

CATEGORIES
TAGS