நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் உண்ணாவிரதம் இருப்பதாக முதலில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் உண்ணாவிரதத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசை கண்டித்தும் நெடுஞ்சாலைத்துறை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் இசக்கி சுப்பையா தலைமையில் தச்சைகணேச நாஜா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிமுத்தாறு முன்னாள் நகரத் தலைவர் சிவன் பாபு சேர்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம்
ஆர்ப்பாட்ட்ததில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை சேர்மாதேவி போலீசார் கைது செய்து தனியார் வாகனத்தில் ஏற்றி அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.
CATEGORIES திருநெல்வேலி
TAGS அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையாஅரசியல்சேரன்மகாதேவி பைபாஸ் சாலையில் ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்நெடுஞ்சாலைத்துறை