“படியில் பயணம் நொடியில் மரணம்” படியில் பயணம் செய்யும் மாணவர்களின் அவலநிலை.

பள்ளி மாணவர்களின் உயிர்காக்க தமிழக அரசு பள்ளி கல்வித்துறை காவல்துறை போக்குவரத்து துறை அலுவலகங்கள்மூலம் தன்னார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல விழிப்புணர்வுக்கான விளம்பரங்கள் செய்தும்,
இன்றைய மாணவர்கள் “படியில் பயணம் நொடியில் மரணம் ” என்பதை அறியாமல் பஸ்களில் படிக்கட்டிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்வது இதைப் பார்க்கும் பொது மக்களிடம் தன் பிள்ளைகளும் இப்படியா என்கிற மன அழுத்தத்தை உருவாக்குகிறது.
இது போன்ற சம்பவங்களை தடுக்க போக்குவரத்து துறை ஓட்டுனர் நடத்துனர்களிடம் மாணவர்களிடம் கண்டிக்கும் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட்டு மாணவர்களை தண்டிக்கும் விதிகளை அமல்படுத்த தமிழக அரசை வற்புறுத்த வேண்டும்.
இதே போல காவல்துறையும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
பழைய பேருந்து நிலையத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் கூடுதலாக காவல் துறையினரை பணியில் ஈடுபடுத்தவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.