பட்டய கணக்காளர்களை கைது செய்வதை அரசு கைவிட வேண்டும் – பொருளாதார நிபுணரான சீனிவாசன்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஜிஎஸ்டி ஆலோசகர்களின் இரண்டாவது மாநில மாநாடு மாநிலத் தலைவர் முகமது அசார் தலைமையில் நடைபெற்றது இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன், மனித உரிமைகள் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் சுரேஷ் கண்ணா உட்பட தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் நாட்டின் நிதி ஆதாரத்திற்கு முதுகெலும்பாக உள்ள நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஈட்டித் தருவதில் பெரும் பங்காற்றி கொண்டிருக்கும் வரியா ஆலோசகர்கள் மற்றும் கணக்காரர்களின் நலன் கருதி மாநில அளவில் நலவாரியம் அமைக்கப்பட வேண்டும், அரசின் வரி சீர்திருத்தம் மற்றும் கலந்தாய்வு கூட்டங்களில் வரிகள் அவர்களின் பங்கை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன்.
எங்கேயோ கையெழுத்துப் போட்டார் என்பதற்காக பட்டயக் கணக்காளர் கைது செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆடிட்டர் யாரும் கையெழுத்து போட மாட்டார்கள் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய கணக்குகளை வைத்து அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர. எல்லா இடங்களிலும் பட்டய கணக்காளர்கள் சென்று அவர்களை ஆராய்ந்து செல்வதற்காக எந்த நிறுவனமும் அவர்களுக்கு எந்தவித பணம் கொடுப்பதில்லை. அது முடியாத காரியம் பட்டய கணக்காளர் கையெழுத்திடுவதால் ஜிஎஸ்டி தவறுக்கு நீங்கள் உடந்தை என்று கூறி கைது செய்வது தவறானது. தற்போது 5 பேரை கைது செய்துள்ளனர் இதனை கண்டிக்கிறேன்.
ஒரு ஆடிட்டர் ஓரளவு கணக்குகள் சரியாக இருக்கிறதா என்பதை தான் பார்க்க முடியும் ஒரு கம்பெனியில் ஒவ்வொரு நுணுக்கத்தையும் பார்த்து கையெழுத்து போட வேண்டுமென்றால் எந்த ஆடிட்டராலும் கையெழுத்து போட மாட்டார்கள் ரூபாய் 5000, 10000 அவரிடம் பீஸ் வாங்குவதற்காக கையெழுத்து போடுவதற்காக அரசு அவர்களை ஜெயிலில் வைத்தால் அவர் என் கையெழுத்து போடவேண்டும். இதுபோல் தேவையில்லாது ஆடிட்டர்கள் துன்புறுத்துவது நமது வரலாற்றிலேயே இருந்ததில்லை இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த முறை தமிழகத்தில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஆனால் ஒரு வருடத்தில் விலைவாசி உயர்வை பார்த்தால் 15.08 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. விலைவாசி ஏறுவது அரசுக்கு நல்லதாக உள்ளது. சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதால் வருவாய் ஏரி இருக்கின்றது தவிர பொருளாதாரத்தில் வருவாய் ஏறவில்லை.
ஜிஎஸ்டி க்கு உள்ளே தமிழக அரசு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறையும் என தொடர்ந்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி வருகிறார் என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் சீனிவாசன்
ஜிஎஸ்டி கவுன்சிலில் நிர்மலா சீதாராமன் மூன்றில் ஒரு பங்கு வாக்கு உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு தான் மாநில அரசுகளுக்கு உள்ளது.
30மாநிலங்களில்
20மாநிலங்களில் பிஜேபியும் அவர்களது ஆதரவாளர்களும் உள்ளனர். நீங்கள் அதை தீர்மானமாக கொண்டு வாருங்கள் நீங்கள் உண்மையிலேயே மக்கள் நலத்தை விரும்புவார்கள் ஆனால் ஜிஎஸ்டி கவுன்சிலில் தீர்மானத்தை கொண்டு வரலாம் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் எதிராக பாக்கு அளிப்பாரா என்று பார்க்கலாம். தற்பொழுது மாநிலத்தில் கேட்பது என்னவென்றால் எங்களுக்கு வருவாய் இழப்பிற்கு காம்பன்ஷேஷன் கொடு என்று தான் கேட்கிறார்கள்
காம்பன்ஷேஷன் கொடுக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.