பட்டுக்கோட்டைஇஸ்ரோவிற்கு செல்லும் பள்ளி மாணவிகளுக்கு இந்தியன் ஆயில் முருகையா ஏஜென்சியில்கெளரவிப்பு.
இந்தியன் ஆயில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கான சூப்பர் ஸ்டார்டர்டே நிகழ்ச்சியில் இஸ்ரோவில் ராக்கெட் தொழில் நுட்பத்தில் தேர்வாகியுள்ள பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் S.கவுசல்யா, S கலைமகள், இருவருக்கும் முருகையா ஏஜென்சி சார்பாக ஊக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கா.மாரிமுத்து மாணவிகளுக்கு பரிசளித்து முகாமையும் தொடங்கிவைத்தார்.
நகர்மன்ற தலைவர் திருமதி சண்முகப்பிரியா இலவச பொது மருத்துவ முகாமையும், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.P. சுரேஷ் அவர்கள் பல் மருத்துவ முகாமையும், தொடங்கி வைத்தனர்.
இந்தியன் ஆயில் கழக விற்பனை மேளாளர் திரு.ஹரிகோவிந் அவர்கள் கலந்து கொண்டு ISRO செல்லும் மாணவிகளைப்பாராட்டினார்.கலந்து கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பொது மற்றும் பல் மருத்துவ முகாமில் ஏராளமான பொது மக்களுக்கு ரூ.10000/= மதிப்பிலான இலவச மருந்து மாத்திரைகள் வழங்கி ஆலோசனையும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை டீலர் திரு.முகேஷ் செய்திருந்தார்.