BREAKING NEWS

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை தஞ்சாவூருடன் இணைக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்டங்களை தஞ்சாவூருடன் இணைக்கும் முடிவு அதிர்ச்சி அளிக்கிறது. !இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளரும், கருக்காடிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவருமான முத்து உத்திராபதி பேட்டி.

தஞ்சை மாவட்டத்தில் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் கல்வி அறிவு,பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதிகரிப்பதற்கு கிராமந்தோறும் பள்ளிகள் உருவாக்கப்பட்டது.

 

தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகள் வளர்ச்சிக்கும், குறைபாடுகளை சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்திட தஞ்சாவூர் கல்வி மாவட்டமாக இருந்ததை கடந்த 1968ல் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம் உருவாக்க பட்டு இரண்டு கல்வி மாவட்ட ங்களாக செயல்பட்டு வந்தது.

 

மேலும் கல்வி நலனை மேம்படுத்தவும், பள்ளிகளின் தரத்தை உயர்த்திடவும் 2008 ம் ஆண்டு கும்பகோணம் கல்வி மாவட்டமும், 2018 முதல் ஒரத்தநாடு கல்வி மாவட்டமும் உருவாக்கப்பட்டு சீரியமுறையில் செயல் பட்டுவந்தன.

 

இந்நிலையில் கும்பகோணம் கல்வி மாவட்டத்தை தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடனும்,, ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தை பட்டுக்கோட்டையுடனும் இணைக்கும் அரசாணை வெளியிடப்பட்டது .

 

இது பள்ளி மற்றும் மாணவர்கள் நலன்களை பாதிக்கும் என்பதால் அந்த அரசாணையை கைவிட வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

 

சமீபத்தில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் கல்வி மாவட்டங்கள் இணைக்கப்பட மாட்டாது என்றும், தஞ்சாவூர் , ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம் கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து செயல்படும் என அறிவித்தார். அமைச்சர் அறிவிப்பிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

 

ஆனால் தற்போது ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்கள் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைப்பதாக அறிவிப்பு வந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், ஏமாற்றத்தை அளிக்கிறது.

 

பட்டுக்கோட்டை கடைகோடியிலிருந்து தஞ்சாவூருக்கு வரும் ஆசிரியர்களுக்கு வந்து செல்லவே நேரம் சரியாகிவிடும் , மற்ற வேலைகள் பாதிக்கப்படும். தஞ்சாவூரில் இருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டையின் கடைக்கோடிக்கு ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகளும் அவசரத்திற்கு வர முடியாது.

 

கடைகோடி கிராம மாணவர்களின் நலன்களும்ப பாதிக்கப்படும் , பள்ளிகள் வளர்ச்சியும் பாதிக்கப்படும். ஏற்கனவே நல்ல முறையில் இயங்கி வந்த ஒரத்தநாடு பட்டுக்கோட்டை, கும்பகோணம் , தஞ்சாவூர் கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து அமைச்சரின் அறிவிப்பிற்கு ஏற்ப தொடர்ந்து செயல்பட வேண்டும்.

 

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்களை தஞ்சாவூர் கல்வி மாவட்டத்துடன் இணைக்கும் முடிவினை கைவிட வேண்டும்.

 

ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை கல்வி மாவட்டங்கள் தொடர்ந்து சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி. தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )