BREAKING NEWS

பணம் அச்சிடப்படாவிட்டால் சம்பளம் கொடுக்க முடியாது: கவலையில் பிரதமர் ரணில்

பணம் அச்சிடப்படாவிட்டால் சம்பளம் கொடுக்க முடியாது: கவலையில் பிரதமர் ரணில்.

பணம் அச்சிடப்படாவிட்டால் சம்பளம் கொடுக்க முடியாது: கவலையில் பிரதமர் ரணில்

பணம் அச்சிடப்படாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்று இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று இரவு அவர் கூறுகையில், “பணத்தை அச்சிடுவது எனது கொள்கை இல்லை. ஆனாலும், பணத்தை அச்சிடவில்லை என்றால், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்க முடியாது. மிக உக்கிரமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறோம். இந்த ஆண்டு எமக்கு மிகவும் கடினமான ஆண்டு. அந்நிய செலாவணி இல்லை. அரசிடமும் வருமானம் இல்லை. அந்நிய செலாவணியுடன் வர்த்தகங்கள் நடக்கவில்லை என்றால் வருமானம் குறையும். இதனால் வரியை செலுத்த முடியாது. இதனால் தொழில் வாய்ப்புகளை இழக்க நேரிடும்” என்று கூறினார்.

“அந்நிய செலாவணி நெருக்கடியால் தற்போதைய நிலையில் சுமார் மூன்று பில்லியன் டாலர்கள் தேவைப்படுகிறது. இதனைப் பெறுவதற்கே தற்போது இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாவிட்டாலும் இவற்றை என்னால் செய்ய முடியும்” என்று கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )