`பணியில் திருப்தி இல்லை எனில் பதவி நீக்கம் தான்’- தற்காலிகமாக நியமன ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை.

தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு புதிய வழிகாட்டுதல்களை தமிழக பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத் தலைவர் ஷீலா பிரேம்குமாரி, உயர் நீதிமன்ற கிளையில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வது தொடர்பான மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ‘முறையற்ற முறையில் நடைபெறும் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தால் தகுதியற்றவர்கள் ஆசிரியர் பணியில் சேரும் வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசின் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது’ என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
