BREAKING NEWS

பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

பதக்கங்களை குவித்த பள்ளி மாணவர்கள்! குவியும் பாராட்டுக்கள்!

பழநி குத்துச்சண்டை மாணவர்கள்

பதினைந்து வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி மேட்டூரில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டியில், பழநியை சேர்ந்த மாணவர்கள் தங்க பதக்கங்களைக் குவித்து வெற்றிப் பெற்றுள்ளனர்.
இந்திய ஜூனியர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கங்களைக் குவித்து ஒரு புறம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பது போலவே, தமிழகத்தில் அடுத்த தலைமுறையினர் விளையாட்டுகளிலும், உடற்பயிற்சிகளிலும் ஆர்வமாக உள்ளனர். செல்போன், வாட்ஸ்-அப், இன்ஸ்ட்ரா என்று இளைய தலைமுறையினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட முடியாது.

பழநி லிட்டில் பிளவர் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த மாணவி நித்தீஸ்வரி 33 கிலோ எடை பிரிவிலும், சங்கீதா 54 கிலோ பிரிவிலும், நாகவள்ளி 66 கிலோ பிரிவிலும் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளனர்.

அதே போல், 52 கிலோ எடைப்பிரிவில் பி.வி. பி .மேல்நிலைபள்ளியைச் சேர்ந்த மாணவன் தரணிதரன், லிட்டில் பிளவர் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ரோகினி, ஹரிஹரன் வெள்ளிப்பதக்கமும், திருவள்ளுவர் நடுநிலை பள்ளி மாணவர்கள் சபா, பேரரசு வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )