பத்ம ஹஸ்தா கோசாலை அறக்கட்டளை சார்பில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் .

திருநெல்வேலி மாவட்டம்,
உலக வெறிநோய் தடுப்பு தினத்தினை முன்னிட்டு பத்ம ஹஸ்தா கோசாலை அறக்கட்டளை சார்பில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு இலவச மருத்துவமுகாம் டவுண் நயினார்குளம் சாலையில் நடைபெற்றது.
இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது,இம்முகாமில் கால்நடை மருத்துவர் முகமது அப்துல்காதர் கலந்துகொண்டு செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசியினை செலுத்தினார்.
இம்முகாமினை பத்ம ஹஸ்தா கோசாலை நிறுவனர் பாஞ்சாலகண்ணன்,செயலாளர் இசக்கி வேலம்மாள், பொருளாளர் உமல் பச்ரியா ஆகியோர் செய்திருந்தனர்.
CATEGORIES திருநெல்வேலி