பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடியேற்று விழா.

தஞ்சை வடக்கு மாவட்டம் பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடி ஏற்று விழா நடைபெற்றது விழாவிற்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர் அகமது கபீர், மஸ்தான், தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் உஸ்மான் அலி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தநல்லூரில் மனிதநேய ஜனநாயக கட்சி கொடியை பொதுச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி ஏற்றி வைத்தார்.
அதைத் தொடர்ந்து திருப்பனந்தாள் ஒன்றியம் கோனுலாம்பள்ளம் கிளையின் சார்பில் மாநில செயலாளர் முபாரக் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலைக்காக செப்டம்பர் 10 அன்று நடை பெற உள்ள தலைமைச் செயலக முற்றுகை ஆயத்தப் பணி குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் பொதுச் செயலாளர் அன்சாரி கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் சேட் , மாவட்ட பொருளாளர் நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் இப்ராஹிம் ஷா, முஹம்மது பாரூக், யாசின், ஒன்றிய செயலாளர் சாதிக் பாட்சா, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
