பந்தநல்லூர் அரசு பள்ளியில். மேலாண்மை குழு கூட்டம்.

பந்தநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது,
கூட்டத்திற்க்கு தலைமையாசிரியர் வெற்றி திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளாராக மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் கலந்து கொண்டு பார்வையிட்டார்.முன்னதாக 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர் என 14 பேரை மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இல்லம் தேடிக் கல்வி மற்றும் சுய உதவிக் குழுவினர்,வார்டு உறுப்பினர் ஆகிய 18 நபர்கள் கலந்து கொண்டு பள்ளி வளர்ச்சி மேலாண்மை குழு தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்ந்தெடுத்தனர். மறு கட்டமைப்பை பள்ளி தலைவர்,துணைத்தலைவர், மேலாண்மை குழு ஆகியோருக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.