பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் மருததுவமனை முன்பாக சாலை மறியல்.
தேனி அருகே பின்னதேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த பனிரெண்டாம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கு காரணமான
இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள்
தேனி மருத்துவகல்லூரி மருததுவமனை முன்பாக சாலை மறியல் .
தேனி அருகே உள்ள பின்ன தேவன்பட்டி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகள் பாண்டீஸ்வரி . 17 வயதான பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இரண்டு குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில்,
பெண் வீட்டிலிருந்து பேச்சுவார்த்தைக்கு சென்ற போது இளைஞரின் தாய் உள்ளிட்டோர் கடும் வார்த்தையால் திட்டியதால் மனம் உடைந்த பள்ளிமாணவி இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்தார், இந்நிலையில் அவரது உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக இறப்பிற்கு காரணமான அப்பகுதியை சேர்ந்த விக்ரம் என்ற இளைஞர் என்று அந்த மாணவி எழுதி வைத்த கடிதம் வெளியாகி உள்ள நிலையில், அந்த இளைஞரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை போராட்டம் நடைபெற்றது.
குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை வழிமறித்து கடுமையான வாக்குவாதத்தில் மாணவியின் உதவினர்கள், ஈடுபட்டு வருவதால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதா உறுதிகூறி சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினார்கள் . இதையடுத்து போக்குவரத்து சீரானது.