பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி ஆணையரிடம் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு.
நெல்லை மாவட்டம்,
களக்காடு நகராட்சிக்கு சொந்தமான புதிய பேருந்து நிலையம் எதிரில் வானொலி நிலையம், மற்றும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த பயணிகள் அமரும் நிழற்குடை காணவில்லை ஆக்கிரமிப்பு செய்தவர்களை நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநருக்கும் நகராட்சி ஆணையருக்கும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பதிவு தபால் முலம் மனு அனுப்பபட்டது.
அதன் அடிப்படையில் நகராட்சி மண்டல இயக்குநரிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. அதன் நகலை இணைத்து களக்காடு நகராட்சி ஆணையரிடம் இன்று ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, நகர தலைவர் கமாலுதீன் முகைதீன்,இணை செயலாளர் ரபிக், வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ் உசேன், செயற்குழு உறுப்பினர் ஆரிப் பைஜி,காசிம் ஆகியோர் உடன் இருந்தனர்.