பயிர் காப்பீடு செய்ய வலியுறுத்தி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரை முற்றுகையிட்ட விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது குருவை சாகுபடிக்கு மே 24ஆம் தேதி தண்ணீர் திறந்தும்,

இதுவரை பயிர் காப்பீடு செய்யாததை கண்டித்தும் தென்னையை தோட்டக்கலைதுறையில் சேர்க்க கூடாது என வலியுறுத்தியும் கருப்பு பேட்ஜ் அணிந்து கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி,

மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர் இதனால் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.
