பரமக்குடி அருகே கொட்டகுடி கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற எருது கட்டு விழா!.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. வழக்கமாக ஆண்டுதோறும் ஆணி மாதத்தில் எருது கட்டு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற எருதுகட்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த எருது கட்டு விழாவில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நடைபெற்ற விழாவில் ஆக்ரோஷமாக சுற்றிய காளைகளை வீரர்கள் ஆர்வமுடன் அடக்கினர். விழாவை காண்பதற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
CATEGORIES Uncategorized
