BREAKING NEWS

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளுக்கிடையேயன விளையாட்டுகள் குழுப்பணி மற்றும் போட்டி திருச்சி பிஹெச்இஎல் வளாகத்தில் நடைபெற்றது.

திருச்சி, 

பல்வேறு பிரிவுகளின் அணிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள், குழுப் பணி மற்றும் வீரர்களிடையே போட்டி மனப்பான்மையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பல்வேறு பிரிவுகளுக்கு இடையேயான கலாச்சாரம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.

 

பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளியின் கைலாசபுரம் ஊரகத்தில் உள்ள பிஹெச்இஎல் மனமகிழ் மன்றத்தின் உள்ளரங்கில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய பிஹெச்இஎல் பிரிவுகளுக்கிடையேயான கூடைப்பந்து மற்றும் மேசைப்பந்துப் போட்டிகளின் தொடக்க நடைபெற்றது.

 

 

விழாவில் பங்கேற்றவர்களிடம் பேசும்போது பிஹெச்இஎல் திருச்சிராப்பள்ளி வளாகத்தின் செயலாண்மை இயக்குநர் ஸ்ரீனிவாசன், இவ்வாறு தெரிவித்தார்.

 

இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையின் அடையாளமாக இருப்பதைப் போல, தேசத்திற்குப் பங்களிப்பதில் ஒற்றைக் கவனத்துடன் பலதரப்பட்ட பின்னணியைச் சேர்ந்த ஊழியர்களைக் கொண்டிருப்பது பிஹெச்இஎல்-இன் தனித்துவமான பண்பு என்று அவர் கூறினார்.

 

பெருந்தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு பிஹெச்இஎல் பிரிவுகளுக்கு இடையே ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வைத் தொடங்கி வைப்பதில் அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

 

பெங்களூரு, போபால், டெல்லி, ஹரித்வார், ஹைதராபாத், ஜான்சி, ராணிப்பேட்டை மற்றும் திருச்சி உட்பட நாடு முழுவதும் உள்ள பிஹெச்இஎல்-இன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பதினைந்து அணிகளின் மொத்தம் 139 வீரர்கள் இந்த மூன்று நாள் நிகழ்வில் பங்கேற்கின்றனர். இறுதிப் போட்டிகள் ஜனவரி 7ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும்.

 

முன்னதாக, இணைப்பில்லா எஃகுக் குழாய் ஆலை, திருமயம் மின்னாலைக் குழாய்கள் பிரிவு ஆகியவற்றின் பொது மேலாளர் மற்றும் மனமகிழ் மன்றத்தின் தலைவர். கமலக்கண்ணன் வரவேற்றார். மனமகிழ் மன்றத்தின் துணைத் தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS