பள்ளிகொண்டா பகுதியில் நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு கண்டுகொள்ளாத வருவாய்த் துறையினர்.

வேலூர் மாவட்டம்-பள்ளிகொண்டா-மளிகை தெரு-சிவன் கோயில் அருகில் 12 அடி பாபு ராவ் கசக்கால்வாய் மேல் 2 அடி கட்ட ஆரம்பிக்கும் போதே விவசாயிகள் ஆட்சேபணை தெரிவித்தனர்.
நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்யாதீர்கள். 12 அடி கல்வெர்டு 2 அடி கட்டினால் மழை காலத்தில் விவசாயத்திற்கு வரும் தண்ணீர் வீணாகும் என கூறியும் ஒப்பந்ததாரர் காதில் கூட வாங்காமல் கட்டி முடித்துவிட்டார்.
பொதுப்பணி துறை (கால்வாய்) விவசாயிகள் முறையிட்டு அத்துறை மூலம் ககட்ட அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது தான் அதுவரை வராத பேரூராட்சி உதவி பொறியாளர் அவ்விடத்தை பார்வையிட்டார்.
ஆட்சேபணை தெரிவித்த விவசாயிகளை கடிந்துக் கொண்டு ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக பேசினார். அந்த கல்வெர்டு கட்டுவதற்கு முன் இடத்தை பார்வையிட வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிடவில்லை எனவும் பொதுமக்கள் தரப்பில் புகார் அளித்தோம் கட்டப்படும் போதும் அவ்விடத்தை வந்து பார்வையிடாமல் நீர்நிலை ஆக்கிரமிப்பு செயந்தவருக்கு துணை போவது போல் இவ்வாறு பல தவறுகளை செய்துவிட்டு விவசாயிகளையும் பொதுமக்கள் புகாருக்கு செவி சாய்க்காமல் வருவாய்த் துறையினர் கண்டும் காணாமல் இருப்பதால் அப்பகுதி விவசாயிகளுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் வேதனையும் அளிக்கிறது.
தற்போது 12 அடிக்கு கல்வெர்டு கட்ட சொன்னால், நாள் கடத்துகிறார். எனவே வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதை இடித்து அகற்றிடவும், நீர் நிலை ஆக்கிரமிப்பை மீட்டு தரவும் நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும் அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது